Friday, February 8

அமைச்சர் நிமலின் உரைக்கு பொதுபலசேனா எதிர்ப்பு


அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்களை  மறுப்பதாக, பொதுபலசேனா  அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞாணசார தேரர் தமது மறுப்பை வெளியிட்டுள்ளார்.
தமது அமைப்பின் செயற்பாடுகளை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நன்கு புரிந்து கொள்ளவில்லை என அவர் தமது எதிர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
  
அகில  இலங்கை ஜம்இய்யத்துல்  உலமா சபையினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் தொடர்பில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம்   பாராளுமன்றில் ஆற்றிய  விசேட உரைக்கு, அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று பதில் வழங்கினார்.
 
இதன்போது முஸ்லிம்களுக்கு எதிராக அல்லது ஹலால் சான்றிதழுக்கு எதிர்ப்பு வெளியிட்டவர்கள் தொடர்பில்   பேசிய அமைச்சர் அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிசார்  விஷேட  நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளதாக தெளிவுபடுத்தினார்.
இதனை அடுத்தே ஞாணசார தேரர் குறித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment