பதவிக்காக நான்அரசியலுக்கு வரவில்லை. மரணம் நிச்சயம் என்பதால்த்தான்
அரசியரலுக்கு வந்தேன். மக்களின் உரிமைக்காக அரசியல் பேசி மரணிக்கும்
வரை போராடுவதுதான்எனது நோக்கம். பதினைந்து ஆண்டுகள் ஆயுதம் தாங்கிப்
போராடியவன் நான். மஷூர் மௌலானா ஆயுதம் தாங்காத பாராளி. நான் ஆயுதம்
தாங்கிய போராளி.அதுதான் அவருக்கும் எனக்குமிடையிலான வேறுபாடு.
சிறுபான்மையினரின் உரிமைகள் என்னுள் வேரூன்றிப்போய் காலத்தின்
தேவைகளைக்கருத்திற்கொண்டு அவை பல சந்தர்ப்பங்களில் போராளியாகவும்
என்னை மாற்றியுள்ளதுஎனஅமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் முன்னாள் மேலவை உறுப்பினரும் கல்முனை மாநகர
சபையின் முன்னாள் மேயரும் செனட்டருமானமஷூர் மெளலானாவின் அகவைஎண்பதுநிறைவு
விழா கடந்த வியாழக்கிழமை மாலை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. அங்கு
உரையாற்றுகையிலேயே அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு
கூறினார்.
அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்
கட்சிகளுக்கிடையில் உடன்பாட்டு
அரசியலுக்கானவாய்ப்புக்கள்சாத்தியமில்லை.ஆனால் உடன்படிக்கை
அரசியலுக்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. உடன்பாடுகளை மறந்தாலும்
உடன்படிக்கைகளை மறக்காமல் அரசியல் ெசய்யலாம்.பழக்கத்தின் தடத்தில் சரிந்து
விடும் அரசியலை புறந்தள்ளி யதார்த்தத்தின் தடத்துக்கு அதைக்கொண்டு வர
வேண்டும்.எனவே சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் உடன்படிக்கையின்
அடிப்படையில் செயற்பட முடியும்
முஸ்லிம்கள் தேசியக் கட்சிகளுக்குப்பின்னால் சென்றதை விட தமிழ்
கட்சிகளுக்குப் பின்னால் சென்றதே அதிகம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
முஸ்லிம் பிரிவொன்றை அமைப்பது என்பது சாத்தியமான விடயமல்ல.
ஏனெனில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
ஆகியன முஸ்லிம் பிரிவை ஆரம்பித்தன. அவை எந்தளவுக்கு
சாத்தியப்பட்டதென்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். ஆகவே
த.தே.கூட்டமைப்பும் அதை செய்ய வேண்டுமா? ஒரே கொள்கையின் கீழ் தமிழ்,
முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியப்படாது.ஆகவே உடன்பாட்டு
அரசியல் ஏற்புடையதல்ல.எனினும் உடன்படிக்கையூடாக ஒன்றிணைந்த
செயற்பாடுகளை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்னெடுக்க
முடியும்.
வாழ்க்கை முறையில் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படடவர்கள்.குடியேற்ற விடயத்தில்
கடினமாக்கப்பட்டவர்கள். முஸ்லிம்களுக்கு வாழ்க்ககைக்கான பாதுகாப்பு
இருக்குமாயின் வட கிழக்குக்கு வௌியிலும் தமிழ் பேசத்தயார். யதார்த்தத்தில்
இனங்களுக்கிடையில் வேறுபாடில்லை. ஆயினும் சூழலுக்கு ஏற்றவாறு வேறுபடுகிறது.
2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் விடுதலைப்
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்தோம்.அப்போது
'தமிழர்கள் அரசாங்கத்தை எதிர்த்து தமது உரிமைகளுக்காக
போராடுகின்றார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அரசுடன்
இணைந்துகொண்டுதமது உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்கின்றார்கள்'என
பிரபாகரன் கூறினார். இவ்வாறு அவர் கூறியதும் நான்
ஆச்சரியப்பட்டேன்.
எவ்வாறாயினும் சந்தர்ப்ப சூழலில் ஏற்பட்ட தாக்கங்களால்பல்வேறு பரிணாம
போராட்டங்களுக்கு எங்களை இட்டுச்சென்றன. அரசியலில் பதவிகளைஎடுத்தால்
கொடுக்க டமுடியாது. கொடுத்தால் எடுக்க முடியாது எனவும் கூறினார்.
No comments:
Post a Comment