கேகாலை நகர ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை
கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் அதிகாலை 2 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்து வருகை தந்த பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இப் பள்ளிவாசல் கண்டி-கொழும்பு வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கடந்த வாரம் காலி ஹிரும்புரை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment