Thursday, February 28

மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்




திக்வல்லையைச் சேர்ந்த  மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். நேற்று 27-03-2013 மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூவரும் தனியாக வந்துள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

பயத்தினால் பொலிஸுக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர். 

குறிப்பு:

பேரினவாதிகள் செறிவாக வாழும் பகுதிகளில் முஸ்லிம் பெண் பிள்ளைகள் தனித்து பயணிக்க வேண்டாம் என்றும், பெற்றார் இப்படியான நிகழ்வுகள் இடம் பெறாதிருக்க விழிப்பாக இருக்குமாறும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment