Thursday, February 28

'ஹலால்: உண்மையும் பொய்யும்' - ஹெல உறுமய நூல் வெளியீடு








'ஹலால்: உண்மையும் பொய்யும்' எனும் தலைப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி புதிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
நூலின் முதற்பிரதியை ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் பெற்றுக் கொண்டார்.
 
இங்கு உரை நிகழ்த்திய ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், ஹலால் இன்று நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. எமது கட்சி ஹலாலுக்கு எதிரானதல்ல. ஆனால் அடுத்த சமூகங்கள் மீது ஹலால் திணிக்கப்படுவதையே நாம் எதிர்க்கிறோம்.
 
எந்தவொரு பௌத்த அமைப்பும் இலங்கையில் ஹலாலுக்கு எதிராக செயற்படவில்லை. நாம் ஹலாலுக்கு எதிரானவர்கள் என்று எவரேனும் கூறினால் அது திரிபுபடுத்தப்பட்டது என்றார்.
 
இந் நிகழ்வில் ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவும் உரையாற்றினார்.
.

No comments:

Post a Comment