ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போதே அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கட்சியின் தேசிய அமைப்பாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்த காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷ அன்னாரின் பாரியாராவார்.அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராவார்.
No comments:
Post a Comment