Thursday, February 28

இலங்கைக்கு புதிய புவியியல் வரைபடம் தயாரிக்கப்படுகிறது

இலங்கைக்கு புதிய புவியியல் வரைபடம் தயாரிக்கப்படுகிறது


February 28, 2013  10:51 am
இலங்கையில் பூகோல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்ளடக்கி புதிய இலங்கை புவியியல் வரைபடம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பூகோல முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து விரைவில் தகவல் அறியும் வகையில் புதிய புவியியல் வரைபடம் தயாரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த இலங்கை புவியியல் வரைபடம் தயாரிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் குறித்த இலங்கை புவியியல் வரைபடம் வெளியிடப்படும் என என்.பி.விஜயானந்த கூறினார்.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment