Monday, February 18

மனித உரிமைகள் ஆணையர் தலையிட வேண்டும் ! இலங்கை முஸ்லிம்களுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பு கோரிக்கை

இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு இனரீதியாக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையரின் தலையீட்டைக் கோரி, இலங்கை முஸ்லிம்களுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து எமது இணையத்திற்கு கருத்து வழங்கிய அவ்வமைப்பினர்:
இலங்கையில் இன்று இன விரோதம் அதிகரித்து வருகின்றது, இதைப்பார்த்துக்கொண்டு இலங்கை அரசாங்கமும் மெளனமாக இருப்பது சந்தேகத்தைத் தருகிறது. எனவே, இதை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். மார்ச் மாதம் நடைபெறவிருக்கும கூட்டத்தொடரில் பேச வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமது அமைப்பினால் ஒரு முறைப்பாடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பதாகவும் கோரியுள்ளனர்.
இம்முறைப்பாட்டில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ் காணும் இணைப்பில் உங்கள் இணக்கப்பாட்டைத் தெரிவித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment