Monday, February 18

நாளை செவ்வாய்கிழமை மூன்று முக்கிய கூட்டங்கள்


halaalஏ.அப்துல்லாஹ் :கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை கொண்ட ஹலால்  ஆலோசனை குழு  நாளை செவ்வாய்கிழமை கூடி ஆராய்ந்து ஜனாதிபதிக்கு   அறிக்கை சமர்பிக்கவுள்ளது . கூட்டத்தில் ஹாலால் சான்றிதழ் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை ,ஹலால் இலங்கையின் பொருளாதார துறைக்கு வழங்கும் பங்களிப்பு ஏற்றுமதியின் போது அதன் பங்களிப்பு ,உள்நாட்டில் அதன் தேவை என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டு அறிக்கை சமர்பிக்கபடவுள்ளது.
சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில்  முஸ்லிம் அமைச்சர்கள் முக்கிய பங்குபற்றுவர் என்று அறியமுடிகிறது.

அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திபொன்று நாளை  செவ்வாய்கிழமை 19.02.2013 இடம்பெறவுள்ளது.  இடம்பெறப்போகும்  சந்திப்பில்  ஹாலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பில் எழுதுள்ள பிரச்சினைகள் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர்  ஜம்இயதுல் உலமா முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை ஹலால் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் கவுன்ஸில்  முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த  கூட்டமும் நாளை  நடைபெறவிருக்கின்றது.

No comments:

Post a Comment