Monday, February 18

'கிதுபல சேனாவை' ஆரம்பிக்குமாறு பொதுபல சேனா ஆலோசனை









பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் பொதுபல சேனாவை உருவாக்கி செயற்பட்டு வ
ருகின்றோம். அதேபோன்று இந்த நாட்டில் கிறிஸ்தவ சமயத்தைப் பாதுகாக்கும்பொருட்டு கிதுபல சேனா எனும் அமைப்பை உருவாக்குமாறு பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞான சார தேரர் கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
பௌத்தர்களுக்கு எதிராகவும் பௌத்த மதத்துக்கு எதிராகவும் உருவாகிவரும் மதவாதத்தை தடுக்க நாம் பொதுபலசேனாவை உருவாக்கியுள்ளோம். அதேபோன்று கிறிஸ்தவ மதத்தையும் கிறிஸ்தவ மரபுகளையும் பாதுகாக்க கிதுபல சேனா எனும் அமைப்பை உருவாக்குது பற்றி கர்தினால் மல்கம் ரஞ்சித் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹரகம நகரில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒர புறம் இஸ்லாமிய மதவாதம் தலைதூக்கியுள்ளது. மறுபுறம் கிறிஸ்தவ மத அமைப்புகள் பௌத்தர்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுகின்றன. இலங்கையில் உள்ள பௌத்த மத மரபுகளை சிதைக்கும் நோக்கில் 400 அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. அவற்றை நாம் இனங்கண்டுள்ளோம். இவை தொடர்பில் நாம் பௌத்த மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம்.
நாட்டில் பிரிவினைவாதத்தை உண்டுபண்ணும் வகையில் முஸ்லிம் அமைப்புகளால் திணிக்கப்படும் ஹலால் சான்றிதழைப் பற்றி பேச முடியாத கர்தினால் மல்கம் ரஞ்சித் வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி மாத்திரம் வாய்திறப்பது ஏன் எனவும் அவர் இங்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment