Thursday, February 21

மக்கா சென்று வருபவர்கள் அடிப்படைவாதத்தை பரப்புகின்றனர்: பொதுபல சேனா






மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் சவூதியினால் அடிப்படைவாதத்தையும் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளையும் இலங்கையில் பரப்புகின்றனர். முழு உடம்பையும் கருப்பு போர்வையில் மூடிக் கொண்டு செல்ல இலங்கை ஒன்றும் பாலைவனம் அல்ல என்று பொது பலசேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு ‘ஹலால்’ ஒரு புற்று நோயாகும். உலமா சபை ‘‘ஹலால்’ ஊடாக சாதாரண முஸ்லிம்களின் உரிமைகளை மீறிச் செயற்படுவது மாத்திரமின்றி அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் பரப்புகின்றது. எனவே, இதனை இல்லாதொழிக்க வேண்டியது கட்டாயம் என்றும் பொது பலசேனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,


உலமாசபை‘‘ஹலால்’சானறிதழ் ஊடாக பயங்கரவாதத்தை பரப்புகின்றது.இதனால் பொது பலசேனாவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் உள்ளது. இதற்கான ஆதாரங்களை உரிய சாட்சியங்களுடன் விரைவில் வெளியிடுவோம். பொது பலசேனா முஸ்லிம் மக்களுக்கு எதிரான அமைப்பு அல்ல. பெருந் தொகையான முஸ்லிம் இனத்தவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.
ஆனால், அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள் இலங்கையில் பயங்கரவாதத்தை பரப்ப முற்படுகின்றது. முஸ்லிம் அமைப்புகளினால் இன்று இலங்கையில் மத ஆக்கிரமிப்புகளே இடம்பெறுகின்றது. ‘‘ஹலால்’’ என்பது புற்றுநோய்என்பதை உணர்ந்துள்ளோம். வேறு எந்தவொரு மதமும் இலங்கையில் இவ்வாறானதொரு மத ஆக்கிரமிப்பை செய்யவில்லை.
மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் ஏனைய மதத்தவர்களின் உரிமைகளை கரத்தில் கொள்ளாது ‘‘ஹலால்’’ போன்ற சான்றிதழை உலமா சபை வழங்குகின்றது. நிதி நிர்வாகம் என்பவை பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு கூடிய சுதந்திரத்தை இலங்கை வழங்கியுள்ளது. ‘‘மக்கா’’ செல்ல அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றையும் நெறிப்படுத்துகின்றது.
ஆனால், பெளத்தர்களுக்கு ‘‘புத்தகாயா’’ செல்லவோ இந்துக்களுக்கு ‘‘திருப்பதி செல்லவோ எவ்விதமான அரச வேலைத் திட்டமும் கிடையாது.
சவூதி சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் அங்குள்ள கலாசாரத்தை இலங்கையில் பரப்புகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

No comments:

Post a Comment