Wednesday, February 27

அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்கக்கூடாது : பொது பல சேனா

வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது !
நாங்கள் முஸ்லிம்களின் ஹலால் உணவு உரிமைக்கு எதிரானவர்களல்ல ஆனால் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுகள் பெளத்தர்களுக்கு விற்பனை செய்யப்படக்கூடாது, எனவே அ.இ.ஜ.உ கூறியிருப்பது போன்று இவ்விடயத்தினை அரசாங்கம் பாரமெடுக்கக்கூடாது என பொது பல சேனா தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் விரிவாகக் கலந்துரையாடப்பட வேண்டுமே தவிர ஜம் இயத்துல் உலமா கூறுவது போன்று அரசாங்கம் இதை ஏற்று நடத்த முடியாது எனவும் தெரிவித்துள்ள அவ்வமைப்பு ஏன் அப்படியென்பதற்கு தெளிவான விளக்கத்தினை வழங்கவில்லை.
ஆயினும் அரசியல் சதுரங்கத்தில் ஜம் இயத்துல் உலமா இன்று உருட்டிய பந்தை அரசாங்கம் மீண்டும் வீசியெறிந்துள்ளதாக இதைக் கொள்ளலாம் எனவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்

No comments:

Post a Comment