1959ம் ஆண்டு பௌத்த ஆணைக்குழுவின் யோசனைகளை புதிய எல்லை
மீள்நிர்ணயிப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.எல்லை
மீள்நிர்ணயிப்புக்கான தேசிய ஆணைக்குழுவிடம் யோசனைகளை வழங்கிய போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள
நிர்ணயிக்கும் புதிய சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய எல்லை மீள்நிர்ணயிப்பின் போது, மதம் மற்றும் மக்களின் இனம் போன்றவை
குறித்து அவதானம் செலுத்தப்பட கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் அரசியல்
கட்சிகளின் யோசனைகளை தேசிய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த
வாரம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment