சிறிய அரசியல் கட்சிகள் சார்ந்த
தொழிற்சங்கங்கள் என்பவற்றின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து
நிலவுவதால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நீக்குவதற்கு கல்வி
அமைச்சுருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி அமைச்சரும்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த
ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்,
ஐக்கிய தமிழ் ஆசிரியர் சங்கம், அகில இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின்
பிரதிநிதிகள் நீதி அமைச்சர் ஹக்கீமை புதன் கிழமை (20) முற்பகல் நீதி
அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து
வரும் தொழிற்சங்க கட்டளைச் சட்டம், தாபனக்கோவை என்பவற்றுக்கு அமைவாக
சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்த 2007/ 20 ஆம் இலக்க சுற்று நிருபம் அதற்கு
முந்திய 1995/ 2 ஆம் இலக்க கல்வி அமைச்சு சுற்று நிருபம் என்பவற்றிற்கு
மாற்றமாக நேரடியாக அதிகார வர்க்கத்தினரும்,
அரசியல்வாதிகளும் தலையிட்டு ஆசிரியர் இடமாற்றங்களை தமக்கு வேண்டியவாறு கையாளக் கூடிய விதத்தில் பிரஸ்தாப வரைவு தற்பொழுது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அது அமைச்சரவையின் அங்கீகரத்திற்கு சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும், அவ்வாறு உத்தேச இடமாற்ற வரைவு அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், வலய மட்டத்திலும் ஆசிரிய இடமாற்றங்களின் போது அது சிறுபான்மை சமூகங்கங்கள், உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்த சிறிய ஆசிரிய சங்கங்கள், சிறிய அரசியல் கட்சிகளின் ஆசிரியர் சங்கங்கள் ஆகியவற்றில் அங்கத்துவம் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்படும் அபாயம் உண்டென ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நீதி அமைச்சர் ஹக்கீமிடம் உரிய ஆவணங்களை முன்வைத்து அவற்றைச் சுட்டிக்காட்டி விளக்கமளித்தனர்.

தற்போதைய நடைமுறையின்படி தேசிய ரீதியான
மொத்த ஆசிரியர் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு குறையாத உறுப்புரிமை கொண்ட
ஆசிரியர் சங்கங்கள் அல்லது ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக முழு நேரம்
விடுவிக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆசிரியர் சங்கங்கள் ஆசிரிய இடமாற்ற
சபைகளில் பங்குபற்றக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய ஆசிரியர் இடமாற்ற கொள்கை சட்ட
வரைவில் ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக முழு நேரம் விடுவிக்கப்பட்ட
பிரதிநிதிகளைக் கொண்ட ஆசிரியர் சங்கங்கள் ஆசிரிய இடமாற்ற சபைகளில்
பங்குபற்றக் கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. தேசிய மட்டத்திலும்,
மாகாண மட்டத்திலும்,
வலய மட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான
ஆசிரியர்களை பாதிக்கக் கூடியவாறு இவ்வாறான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால்
சிறுபான்மை அரசியல் கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதி அமைச்சர்
இந்த விடயத்தில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென ஆசிரிய
சங்கங்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
குறிப்பிடப்பட்ட விடயம் ஆசிரியர்களின்
ஜனநாயக உரிமைகளை பாதிப்பதோடு தொழிற்சங்க கட்டளைச் சட்;டம் தாபனக் கோவை
விதிகள் என்பவற்றுக்கும் முற்றிலும் முரணாக இருப்பதால் அவ்வாறானதொரு உத்தேச
வரைவு அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால் அதற்கெதிராக
நீதிமன்றங்களின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென்பதோடு,
அவ்வாறன்றி சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு
உரிய தீர்வு காணப்படுமென அமைச்சர் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஆசிரியர்
சங்கங்களின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின்
சார்பில் தலைவர் சங்கைக்குரிய யல்வல பஞ்ஞாசேகர தேரர், அச் சங்கத்தின்
தொழிற்துறை செயலாளர் எம்.ஐ.எஸ். ஹமீட், அச் சங்கத்தின் உப தலைவர் தாஜூதீன்
சப்றி, ஐக்கிய தமிழ் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஏ. ஹேமந்தன், அகில
இலங்கை இஸ்லாம் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.அனஸ்,
பிரதித் தலைவர் ஏ.பீ.எம். அலவி ஆகியோர் அமைச்சருடனான இக் கலந்துரையாடலில்
பங்குபற்றினர். அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்.
சல்மான், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் டி சில்வா, அமைச்சரின்
பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், ஆகியோரும் இதில் கலந்து
கொண்டனர்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர், நீதி அமைச்சு
No comments:
Post a Comment