Wednesday, February 20

மதுபான சாலைகளை அழிக்க முடியாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகளே காரணம்: புத்தரகிததேரர்


மதுபான சாலைகளை அழிக்க முடியாமல் இருப்பதற்கு இந்நாட்டின் அரசியல்வாதிகளே காரணமாக உள்ளனர் என்று அஸ்கிரியபீடத்தின் மகாநாயக்கத் தேரர் உடகம ஸ்ரீ புத்தரகிததேரர் தெரிவித்தார்.

கண்டி நகரில் உள்ள சட்டவிரோதமான மதுபான சாலைகளை அகற்றுவது தொடர்பான மகஜர் ஒன்றை பௌத்த பிக்குமார் அமைப்பு, அஸ்கிரியபீடத்தின் மகாநாயக்கத் தேரர் உடகம ஸ்ரீ புத்தரகிததேரரிடம் சமர்ப்பித்தது. இதன்போதே மகாநாயக்கத் தேரர் உடகம ஸ்ரீ புத்தரகிததேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலைகள், சமயவழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் புன்னிய ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் இருக்கும் மதுபான சாலைகளை அகற்ற முடியாமல் இருக்கின்றது. இதற்கு காரணம் இந்நாட்டின் அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகள் மதுபான சாலைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதோடு அதனை ஊக்குவிக்கின்றனர். இவற்றின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதால் மதுபான சாலைகளை அகற்ற முடியாமல் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment