தலதா
மாளிகாவையை அண்டிய 09 மதுபானக் கடைகளை மூடுமாறு கோரி அறிக்கையொன்றை தேசிய
பிக்குகள் சம்மெளணம் தலதா மாளிகை பிரதம பிக்குமாரிடம் கையளித்துள்ளனர்.
இதன் பிரதிகள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயளாளருக்கு
அனுப்பப்பட்டுள்ளன.
இதன் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயமானது.இந்த
மதுபானக் கடைகள் பாடசாலைகள்,பௌத்த பன்சலைகள்,முஸ்லிம்களது
பள்ளிவாயில்கள்,கிறிஸ்தவ தேவாளயங்கள் என்பவற்றுக்கு மிக அண்மையில்
அமைந்துள்ளமையாகும். மேலும் அவர்கள் அதற்கான துாரங்களை குறிப்பிடம்
அட்டவனணயொன்றையும் இணைத்திருந்தனர்.அது பின்வருமாறு அமைகிறது.
இல |
மதுபானக் கடையின் பெயர் |
முகவரி |
வகை |
துாரம் |
01 |
கொஷி மதுபான தனியார் நிறுவனம் |
239,பிரதான வீதி கண்டி |
விற்பனை நிலையம் |
புஷ்பதான கல்லுாரி-50m ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-75m கதிர்காம தேவாளயம்-75m அருகில் அமைந்துள்ளது |
02 |
வெளிநாட்டு மது விற்பனை நிலையம் |
203,கொழும்பு வீதி கண்டி |
விற்பனை நிலையம் |
புஷ்பதான கல்லுாரி-55m ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-70m கதிர்காம தேவாளயம்-65m அருகில் அமைந்துள்ளது |
03 |
லகீ மதுபான ரெஸ்டுரன்ட் |
217,கொழும்பு வீதி கண்டி |
விற்பனை மற்றும் அருந்துமிடம் |
புஷ்பதான கல்லுாரி-60m ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-70m கதிர்காம தேவாளயம்-60m அருகில் அமைந்துள்ளது |
04 |
கிவர்டன் சீன ரெஸ்டுரன்ட் |
255,கொழும்பு வீதி கண்டி |
விற்பனை மற்றும் அருந்துமிடம் |
புஷ்பதான கல்லுாரி-65m ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-70m கதிர்காம தேவாளயம்-60m அருகில் அமைந்துள்ளது |
05 |
பவன ரெஸ்டுரன்ட் ஸ்டோர்ஸ் |
74,யடிநுவர படுமக கண்டி |
விற்பனை மற்றும் அருந்துமிடம் |
புஷ்பதான கல்லுாரி-65m ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-150m கதிர்காம தேவாளயம்-50m அருகில் அமைந்துள்ளது |
06 |
கண்டி வய்ன் ஸ்டோர்ஸ் |
02,வடுகொடபிடிய கண்டி |
விற்பனை நிலையம் |
புஷ்பதான கல்லுாரி-55m கதிர்காம தேவாளயம்-65m அருகில் அமைந்துள்ளது |
07 |
த கண்டி ஸ்டோர்ஸ் |
54/1/1,தலதா வீதி கண்டி |
விற்பனை நிலையம் |
தலதா மாளிகை-150m கெப்படிபொல கல்லுார்-50m |
08 |
மசன் யடிநுவர |
60,யடிநுவர வீதி கண்டி |
விற்பனை மற்றும் அருந்துமிடம் |
ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-10m கதிர்காம தேவாளயம்-10m முஸ்லிம்களது பள்ளிவாயில்-5m கிறிஸ்தவ தேவாளயம்-10m அருகில் அமைந்துள்ளது |
09 |
ரொயல் பார் என்ட் ஹோட்டல் |
44,ரஜ வீதி கண்டி |
விற்பனை மற்றும் அருந்துமிடம் |
ஸ்ரீ சுமங்கல கல்லுாரி-75m 1வது முஸ்லிம்களது பள்ளிவாயில்-10m 2வது முஸ்லிம்களது பள்ளிவாயில்-50m கிறிஸ்தவ தேவாளயம்-75m தலதா மாளிகை-200m சில்வஸ்டர் கல்லுாரி-150m அருகில் அமைந்துள்ளது |
சந்திப்பு நடைபெற்றபோது கருத்துத் தெரிவித்த தலதா மாளிகை பிரதம பிக்கு
கூறியதாவது தாம் இதற்கு முன்னரும் பல தடவை இது தொடர்பாக கோரிக்கை
விடுத்ததாகவும் எனினும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை
என்றும் அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களை திருப்திப்டுத்தவே அவ்வாறு
மதுபானசாலைகள் திறக்க அனுமதி வழங்குகின்றனர் என்றும்
குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment