Wednesday, February 20

ஈரான் தூதரகத்தை முற்றுகையிட்டு சிங்கள ராவய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்







இலங்கையில் உள்ள ஈரான் தூதரகத்தை முற்றுகையிட்டு சிங்கள ராவய  அமைப்பினர்  ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள குறித்த அமைப்பினர் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் ஈரான் தூதுவராலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இதனிடையே குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அக்மீமன தயாரத்ன தேரர், ஈரானின் குரித்த நடவடிக்கையானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் புத்தர் சிலை ஈரானில்  தடை  செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஈரான் கலாசார அமைச்சு மறுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment