Thursday, February 21

எரிகல் துண்டுகளை விற்கும் புது வியாபாரம் சூடுபிடிக்கிறது!

எரிகல் துண்டுகளை விற்கும் புது வியாபாரம் சூடுபிடிக்கிறது!


ரஷ்யாவில் விண்ணில் இருந்து விழுந்து வெடித்து சிதறிய எரிகல் துண்டுகளை மக்கள் சேகரித்து ஆன்லைனில் விற்க முயற்சித்து வருகின்றனர். அவர்களை பொலிசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

கடந்த 15ம் திகதி யாரும் எதிர்பாராத வகையில், விண்ணில் இருந்து மிகப்பெரிய எரிகல் தகதகவென எரிந்தபடி ரஷ்யாவின் யூரல் மலை பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் 1500 பேர் காயம் அடைந்தனர். 
  
எனினும் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்நிலையில், ரஷ்ய அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட சிறுசிறு எரிகல் சிதறல்களை சேகரித்துள்ளனர். அதேபோல் யூரல் மலை பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் செல்யாபின்ஸ்க் பகுதி மக்கள், அவர்கள் இருப்பிடங்களில் விழுந்த எரிகற்களை தேடி சேகரித்து வைத்துள்ளனர். அவற்றை பிளாக்கில் விற்க ஆன்லைனில் விளம்பரமும் கொடுத்துள்ளனர். 

இந்த தகவல் அறிந்து பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிகல் சிதறல்களில் இரும்பு, சல்பைட் போன்ற சில தாதுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில் எரிகல் விழுந்ததால் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கிறதா என்ற ஆராய்ச்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment