இலங்கை ஒரு ஜனநாயக நாடு
என்ற ரீதியில் பொது பல சேனாவை தடை செய்ய முடியாது என தெரிவித்த ஊடகத்துறை
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவ்வமைப்பு செயற்படுவதற்கு தடை விதிக்க
முடியாது என சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட
கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொது பல சேனா மதவாதத்தை தூண்டும் வகையில்
செயற்படுவதாகவும் இவ்வாறான கடும்போக்கு அமைப்புக்களை அரசு ஏன் தடை செய்யாது
உள்ளது என குறித்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கெஹெலிய
,இது ஒரு ஜனநாயக நாடு . இங்கு பொது பல சேனா மட்டுமன்றி ஏனைய
அமைப்புக்களுக்கும் செயற்படலாம். பொது பல சேனா என்பது ஒரு அமைப்பு மட்டுமே.
அவர்களுடன் மட்டுமன்றி ஏனைய அமைப்பினருடனும் ஜனாதிபதி
கலந்துரையாடியுள்ளார். எனவே பொது பல சேனாவை தடை செய்யவேண்டும் எனக்கூறுவதை
ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment