Wednesday, February 20

புத்தர் சிலை விற்க தடை என வெளியான செய்தி தவறானது - ஈரான் புத்தர் சிலை விற்க தடை என வெளியான செய்தி தவறானது - ஈரான்

புத்தர் சிலை விற்க தடை என வெளியான செய்தி தவறானது - ஈரான்
February 20, 2013  10:18 am
புத்தர் சிலை விற்பனை, கண்காட்சி போன்றவற்றிற்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியினை ஈரான் கலாசார பிரிவு நிராகரித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என ஈரான் கலாசார அலுவலக அதிகாரி ஜபார் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு மாறாக கலாசார பொருட்கள் இறக்குமதி செய்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மதங்களுக்கு அவமரியாதை செய்யப்படுவது ஏற்கத்தக்கதல்ல என ஈரான் கலாசார அலுவலக அதிகாரி ஜபார் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment