நாட்டில் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள்
நடத்தப்படவில்லை என்று அரசாங்கத்தால் எவ்வாறு கூற முடியும். இவ்வாறு
கூறப்பட்டதானது அப்பட்டமான பொய்யாகும். இவ்விவகாரம் இன்றைய நிலையிலும்
குருணாகல் பகுதிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, பொலிஸாரின்
தலையீட்டோடு இவ்விடயம் சுயாதீன விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின்போது நிலையியற் கட்டளை
23 : 2 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் எழுந்துள்ள இனவாதம் மற்றும் மதவாதம் விடயங்கள் தொடர்பில் 2013
பெப்ரவரி 06ஆம் திகதி இந்த சபையில் கேள்வியொன்றினை எழுப்பியிருந்தேன்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர்
எம்.கே.டி.எஸ்.எஸ். குணவர்தன, இந்நாட்டில் இனவாத, மதவாத ரீதியான
பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறி எழுப்பப்பட்ட கேள்விக்கான
உரிய பதிலினை நிராகரித்திருந்தார்.
இருந்தபோதிலும் எனது கேள்விக்கு சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மறுநாளான ஏழாம் திகதி பதிலளித்தார்.
இதன்போது என்னால் முன்வைக்கப்பட்ட கேள்வியானது மிகைப்படுத்தப்பட்ட விடயமாக இருந்ததாக கூறியிருந்தார். அத்துடன், தாக்குதல்களுக்கு இலக்கான பள்ளிவாசல்கள் எவை என்றும், இந்த தாக்குதல்கள் எந்த காலப்பகுதியில் இடம்பெற்றவை என்றும் கேள்வியெழுப்பி அது தொடர்பில் தகவல்களைத் தருமாறும் என்னிடம் கேட்டிருந்தார்.

அது மாத்திரமல்லாது முஸ்லிம் பள்ளிவாசல் அல்லது சமயக் குழுக்களுக்கு
தாக்குதல் என எந்தவொரு சம்பவங்களும் இடம்பெற்றிருக்கவில்லை என்று பொலிஸ் மா
அதிபர் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும் கூறினார்.
எனினும், குருணாகல் மற்றும் ஹிரியால ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இங்கு விளக்குவதற்கு விரும்புகிறேன்.
முதலாவதாக பிக்குகளைக் கொண்ட குழு ஒன்று இங்குறுவத்த முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் புகுந்து பிரித் ஓதி குறித்த பள்ளியை மூடிவிடுமாறு கூறியுள்ளது. இது தொடர்பில் சுடர்ஒளி பத்திரிகையில் 2012 ஜூலை மாதம் 21ஆம் திகதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அம்பன்பொல முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்த புனித குர்-ஆன் வெளியில் வீசி எறியப்பட்டதாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், மக்குல்வெவயில் உள்ள அக்ரம் முஸ்லிம் வணக்கஸ்தளத்துக்கு ஏற்பட்ட
நிலைமை தொடர்பில் எம்.ரி. பதூர்தீன் என்பவர் 2012 ஏப்ரல் 14ஆம் திகதி
ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஆகையினால் ஹிரியால மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களில் எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை என பொலிஸ் அறிக்கையில் கூறப்படுவதானது அப்பட்டமான பொய்யாகும். இந்த பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன், மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களூடாக விடயங்களை அறிந்து
இது தொடர்பில் சுயாதீனமான விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும்.
சில விடயங்களை இங்கு பகிரங்கமாக கூற முடியாதுள்ளது. அவ்வாறு கூறினால் நாட்டில் அது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். எனினும், அந்தத் தகவல்களைத் தர முடியும். எப்படியிருப்பினும் குருணாகலையில் இந்த பிரச்சினை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இப்படி இருக்கும்போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று அரசாங்கம் எவ்வாறு கூற முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

No comments:
Post a Comment