Friday, February 8

சவூதி அரசுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்பட்டு வந்த அமெரிக்க விமான நிலையம்

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., சவூதி அரேபியா நாட்டில் ஆளில்லா உளவு விமான நிலையத்தை ரகசியமாக நிர்வகித்து வந்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விமான நிலையத்தில் இருந்து பறந்து சென்ற விமானத்தின் உதவியுடன் தான், அல்கொய்தா இயக்கத்தின் தாக்குதல்களுக்கு எல்லாம் திட்டம் வகுத்து தந்த அன்வர் அல்-அவ்லாகி கடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டான் என்பதும் தெரிய வந்துள்ளது.


1991ம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரில் பங்கேற்க சவூதி அரேபியாவிற்கு சென்ற சுமார் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2003ம் ஆண்டு அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது அங்கே அமெரிக்க ராணுவ பயிற்சி மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக இயங்கி வருகிறது.


இந்நிலையில், சவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் இந்த விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த தகவல் அமெரிக்க ஊடகங்களுக்கு 2011ம் ஆண்டின் போதே தெரிந்திருந்தும் அவை இது பற்றிய செய்திகளை வெளியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment