Friday, February 8

எதிர்ப்புகளுக்கு மத்தியில் 70 பேருடன் ஜனாதிபதி மஹிந்த கயாவில்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் 70 பேருடன் ஜனாதிபதி மஹிந்த புத்த கயாவில்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயாவை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் மாநில மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்றனர்.

மாநில பொலிசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ராஜபக்ஷவுடன் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது.

வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோவிலில் ராஜபக்சே சாமி கும்பிடுகிறார்.

மதியம் அவருக்கு நிதிஷ்குமார் விருந்து அளிக்கிறார். ராஜபக்சேவை எதிர்த்து மகாபோதி கோவில் அருகே கம்யூனிஸ்ட்டு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment