Wednesday, February 20

பேனை குண்டு வைத்திருந்த பிக்கு விளக்கமறியலில்






பேனைக்குண்டு , கைக்குண்டு மற்றும் சிறிய அளவிலான சி-4 ரக வெடி பொருட்கள் ஆகியவற்றை தன்வசம் வைத்திருந்த பனாமுற பிரதேச விகாரையொன்றின் பிக்குவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிபிட்டிய மாஜிஸ்திரேட்டே நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபரான பிக்குவுக்கு குறித்த குண்டுகளையும் வெடிபொருட்களையும் வாளால்லாகோடா தென்பிட விகாராதிபதியே வழங்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றின் பேரில் பொலிசார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு ஒன்றின் மூலமே சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டிருந்தார். மாகர் பேனையில் சூட்சுமமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த பேனை குண்டானது திறந்து எழுதும் போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதில் மேலும் சிலருக்கு சம்பந்தம்  இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் தப்பிச்சென்றுள்ளதாக சந்தேகிக்கும் மற்றொரு பிக்குவை தேடிவருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment