Wednesday, February 20

பொது பல சேனாவுக்கு ஹலால் தொடர்பில் விளக்கமளிப்பதில் பலனில்லை : அசாத் சாலி





முஸ்லிம் சமூகம் தமக்காக குரல்கொடுக்க யாருமில்லாத நிர்க்கதி நிலைக்குள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றதென கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பு -7 இல் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அசாத் சாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகம் தமக்காக குரல்கொடுக்க யாருமில்லாத நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மௌனித்துப் போயுள்ளனர். நாட்டில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியே இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, பொதுபல சேனாவுக்கு ஹலால் பற்றி விளக்கமளிப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை. அத்துடன் இது குறித்து அவ்வமைப்புடன் பேசுவதும் அர்த்தமற்றது. அவர்களின் காலக்கெடு எமக்குத் தேவையில்லை. ஜம் இய்யத்துல் உலமா இந்த நாட்டில் முஸ்லிம் அல்லாத நிறுவனங்களுக்கு கொடுத்த ஹலால் சான்றிதழ்களை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment