சம்பிரதாயபூர்வமாக
வாழும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் எதிராகச் செயற்பட்டுக்
கொண்டிருக்கும் ஸவுதி இஸ்லாமிய கொள்கைவாதிகளான ‘வஹாபி ஸலாபி’
அடிப்படைவாதிகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொதுமக்கள்
எழவேண்டும், எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று பொது பலசேனா கேட்டுக்
கொண்டுள்ளது.
முஸ்லிம்களின் பழைய பள்ளிகளைக் கூட அழித்தொழிக்கும் தன்மை கொண்ட அடிப்படைவாதிகளான அந்த இயக்கம் பௌத்த மதத்தை இழிந்துரைப்பதோடு இந்த நாட்டில் மத மற்றும் இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணி வருவதாகவும் பொது பல சோனாவின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
முஸ்லிம்களின் பழைய பள்ளிகளைக் கூட அழித்தொழிக்கும் தன்மை கொண்ட அடிப்படைவாதிகளான அந்த இயக்கம் பௌத்த மதத்தை இழிந்துரைப்பதோடு இந்த நாட்டில் மத மற்றும் இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணி வருவதாகவும் பொது பல சோனாவின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
பொது பல சேனா இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ‘கல்ப் நிவ்ஸ்’ எனும் பத்திரிகையில் அறிக்கையொன்று சென்ற வாரம் வெளிவந்திருந்தது. அந்த அறிக்கை வெளிவந்து அடுத்த நாளே இலங்கையின் ‘பைனேன்சியல் டைம்ஸ்’ பத்திரிகையிலும் அது பிரசுரமானது. அதனால் சந்தேகத்திற்குரிய முறையில் முஸ்லிம் பயங்கரவாதக் குழுவொன்று இந்நாட்டில் இருப்பதாக நம்புகிறோம். அதனால் இவ்விடயத்தில் எல்லோரும் விழிப்புணர்வடைய வேண்டும் என்று பொது பல சேனாவின் இணையத்தளம் கூறுகிறது.
முஸ்லிம் கலவரம் ஒன்றின் காரணமாக, இந்நாட்டு அரசியல்வாதியொருவர் சென்ற சில நாட்களுக்கு முன்னர் ஆயுதத்தைக் கையிலெடுப்போம் என்றதை நனைவுறுத்துகின்ற அந்த இணையத்தளத்தின் மேலாளர் கிரம விமலஜோதி தேரர், தங்களது இயக்கம் காவியுடை தரித்த பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதற்காக கடுமையான முறையில் சாடியிருக்கிறார்.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை, வடக்கில் பௌத்த கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளிவாசல்களை அமைத்தல் ஆகியவற்றை மறந்துவிட்டிருக்கின்ற அந்த அரசியல்வாதிகள், இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்புடையது எனும் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதாகவும் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு எதிராக சவால் விடுகின்ற மத்திய கிழக்கு மூடர்களுக்காகவோ, ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்றும் தேரர் குறிப்பிட்டிருக்கிறார்....
இலங்கையில் வஹாபிஸம் உட்பட இன்னும் நான்கு இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடும் பொது பல சேனா இயக்கம், முஸ்லிம்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியது கட்டாயக் கடமை என்றும், பெண்கள் உடல் உறுப்புக்களை மறைப்பது கட்டாயம் என்றும், மீசை கத்தரித்து தாடி வைப்பது கட்டாயம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் மற்றவர்களை அடித்து நொறுக்குவதையும், கொலை செய்வதையும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் கண்டுகொள்வதில்லை என்றும் சாடுகிறது. செய்ய வேண்டியது இருக்க, அவர்கள் பௌத்த மதகுருமார்ளையும். பௌத்த மக்களையும் அகௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த இணையத்தளம் தெளிவுறுத்துகிறது.
கோவை ஐயூப், பீ. ஜெய்னுல் ஆபிதீன், ‘பீஸ் ரீவி’ அங்கத்தவர்களாகிய பிலால் பிலிப்ஸ், ஷாக்கிர் நாயக் ( தென்னிந்திய ஸவுதித்துவ தலைவர்) முஸ்டிமேன்க், லீமூ போன்றோர் அண்மைக் காலமாக இஸ்லாமிய மத்தை இலங்கையருக்கு போதிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டு மதபோதகர்களாவர்.
IIRO (தெமட்டகொட மகாவலிப் பூங்கா), IRO (மாளிகாவத்தை), Alshabab
(மாளிகாகந்த வீதி), Muslim Aid, WAMY (தெமட்டகொட மகாவலிப் பூங்கா) NDIA
(ராஜகிரிய ரே மாவத்தை) HIRA (தெகிவளை), MFCD (புதுக்கடை) Serandib
(தெமட்டகொட) ஆகிய இயக்கங்கள் இந்நாட்டில் இயங்குகின்ற ஸவுதித்துவ ‘வஹாபி
ஸலாபி’ என்.ஜீ.ஓ இயக்கங்களை இயக்குகின்றன. இதுதவிர, இலங்கைத் தௌஹீதம்
ஜமாஅத் இயக்கம் (தலைமைக் காரியாலயம் - மாளிகாவத்தை), அகில இலங்கை தௌஹீத்
ஜமாஅத் இயக்கம் (தலைமைக் காரியாலயம் -தெமடகொட), சுன்னத்த அன்ஸார் இயக்கம்
(தலைமைக் காரியாலயம் - பரகஹதெனிய), ஜமாஅத்தே இஸ்லாமி (தலைமைக் காரியாலயம் -
தெமட்டகொட), ஸலாபி இயக்கம் (களுபோவில வைத்தியசாலை வீதி), உலமா சபை ஆகிய
இஸ்லாமிய மதவாதிகள் பயங்கர இயக்கங்கள் என்று பொது பலசேனா இயக்கம்
குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment