பலாங்கொடை நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் பிரதேசமான தப்தர் ஜெய்லானி பகுதியை ஆக்கிரமிப்புச் செய்ய சிலர் மேற்கொண்ட முயற்சி, பொலிஸாரின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26-01-2013 மாலை 4 மணியளவில் பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த சுமார் 200 பேர் தப்தர் ஜெய்லானி புனித பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். பலத்த பொலிஸ் பாதுகாப்பு காரணமாக இவர்கள் மாலை 6 மணியளவில் திரும்பிச் சென்றுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல பிரதேசங்களிலும் சில விஷமிகள் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment