ஆமினா
அனைவரின் மீதும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஹிஜாப். முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர்.
ஹிஜாப். முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர்.
இப்படி ஒரு புறம் இருக்க, பெரும்பாலும் ஒரு விஷயத்திற்காக சமுதாயத்தில் போராட்டங்களோ, எதிர்ப்புக்குரலோ கிளம்பும் போது எதிர்ப்புக்குள்ளான விஷயம் படிப்படியாக மறைந்தோ தடைசெய்யப்பட்டோ விடும். அதனால் தான் சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் போது தங்கள் கண்டனங்களை தெரிவிக்க முற்படுகிறார்கள். இது இயல்பு.
ஆனால் இந்த இயல்புக்குநேர் எதிர் விளைவாக எதிர்ப்புகள் அதிகம் வர வரத்தான் ஹிஜாப்பின் மதிப்பும் அதன் முக்கியத்துவமும் அனைவரிடத்திலும் பரவுகிறது. உதாரணத்திற்கு ஹிஜாப்பிற்கு என்று அதிகமாக எதிர்குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ அன்று முதல் இஸ்லாமியர்களிடையே ஹிஜாப் வேகமாக பரவிவருகிறது. இஸ்லாம் வலியுறுத்திய கன்னிய உடை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. முன்பு அணியாதவர்கள் கூட ஹிஜாப் பேண ஆரம்பித்தனர். தலை மட்டும் மூடியிருந்தால் போதும் என்ற நிலை மாறி முழுமையான உடை அணிய ஆரம்பித்தனர். முன்பு ஊர்களில் கருப்பு ஹிஜாப் போட்ட பெண்களை பார்க்கவே முடியாது.
மாஷா அல்லாஹ்... இன்று நிலைமையே தலைகீழ். வெறும் தலையை மட்டும் மறைத்து வரும் பெண்களை காண்பது அரிதாகிவிட்டது . எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம் என்பது இது தானோ என்னவோ?
அந்த வரிசையில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி....
வரும் ஜூலையில் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் UAE பழுதூக்கும் வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க சர்வதேச weightlifting கழகம் (IWF) அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு ஹிஜாப்பிற்கு weightlifting பிரிவில் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒலிம்பிக் சரித்திரத்தில் இது தான் முதல் முறை.
இதற்காக IWF விதிமுறைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது,
1.முஸ்லீம் பெண்கள் தலையை மறைத்தவாறு பங்குபெறலாம். (முகத்தை அல்ல)
2.இதற்கு முன் காலர் இல்லாத முட்டிக்கை வரையில் தெரியும்படியான மேல் சட்டையும், கால் முட்டி தெரியும் படியான கீழ் ஆடையும் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் முஸ்லீம் பெண்கள் இஸ்லாம் பரிந்துரைத்த முழுமையான உடையான ஹிஜாப் அணியலாம் என்று விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சரி ஏன் இந்த திடீர் விதிமாற்றம் என்ற கேள்வி எழும் இல்லையா?
அமெரிக்காவை சேர்ந்த முஸ்லீம் பெண் ஹிஜாப் அணிந்து விளையாட கூடாதென்று தடுக்கப்பட்டார். அவர் அந்த தடையை எதிர்த்து போராடினார். அந்த தாக்கத்தின் தொடர்ச்சியாக ஹிஜாப் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்கோ தனியொரு நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை கூட எந்தளவுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கே நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கு பாத்தீங்களா? :-) போன ஒலிம்பிக்கில் பல பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி பங்குபெற்றதும் பலரை திரும்பிபார்க்க வைத்திருக்கும்.
இந்த விதிமுறை கட்டாயமில்லை எனவும் விரும்பியவர்கள் பழைய விதிமுறைகள் படியே ஆடை அணியலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை மாற்றத்தின் காரணமாக இன்னும் நிறைய மக்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அருமையானதொரு வாய்ப்பு உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒலிம்பிக்கின் போது ஹிஜாப் அணிந்து விளையாட ஏற்கனவே ரக்பி விளையாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு படிப்படியாக இனிவரும் காலங்களில் ஒலிம்பிக்கில் ஹிஜாப் முக்கிய இடம் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
2008-ன் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளை சார்ந்த வீராங்கனைகள் படகுபோட்டி, வில்வித்தை போட்டி மற்றும் இன்ன பிற போட்டிகளிலும் ஹிஜாப் அணிந்தபடியே பங்கெடுத்தார்கள். ஹிஜாப் அணிந்த விளையாட்டு வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருந்தார்கள். இதன் மூலம் ஹிஜாப் அணிவது வெற்றியை துளி அளவும் தடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
என் கேள்வி என்னவென்றால்
1. IWF கழகம் ஆணாதிக்கம் நிறைந்தவர்களா இருப்பாங்களோ?
2. ஹிஜாப் என்னும் மூட நம்பிக்கையை ஆதரிப்பதால் ஒலிம்பிக் அமைப்பும் மூடநம்பிக்கைவாதிகளின் அமைப்பாக இருக்குமோ?
3. ஹிஜாப்பை அனுமதிக்கும் அவர்கள் கூட பிற்போக்குவாதிகளா இருப்பாங்களோ?
4. ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் என்றும், பெண்களை போகப்பொருளாகவும் முஸ்லீம்கள் சித்தரிக்கிறார்கள் என்றும் கூறுபவர்களே!, ஒலிம்பிக் அமைப்பும் அப்படி தான் நினைக்கிறதோ?
கூறுங்கள்....பதில் அறிய ஆவல்
எதார்த்தம் என்னவென்றால் ஹிஜாப் என்றும், எப்போதும் அனைவருக்கும் பொருந்தும் பொதுவான உடை!
சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயம் படிப்பினை உண்டு ...
No comments:
Post a Comment