களுத்துறை,
பாஹியன்கலவிலுள்ள பாஹைன் குகை தொல்லியல் அகழ்வராய்ச்சிப் பகுதியிலிருந்து
வரலாற்றுக்கு முந்திய மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடொன்றை
முதன்முறையாக கண்டுபிடித்துள்ளதாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர்
நாயகம் செனரத் தஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரலாற்றுக்கு முந்திய மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூட்டை நாங்கள் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையெனவும் அவர் கூறினார்.
'வரலாற்றுக்கு முந்திய மனிதன் ஒருவனின் எலும்புக்கூட்டை நாங்கள் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவை. முன்னர் அம்பலாந்தோட்டை, ஹங்கமவின் மெனிக்ஹாமி பகுதியிலும் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தோம். ஆனால் அது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட முழுமையான எலும்புக்கூடு போன்று காணப்படவில்லை' எனவும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இவ் எலும்புக்கூடு 12,000 வருடங்களுக்கு முந்தியது. தங்களது எதிர்கால ஆராய்ச்சிக்கு இது மிக முக்கியமானதெனவும் அக்கால மனிதன் பற்றி தெரியாத உண்மைகளை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
இதனைச் சூழவுள்ள பகுதிகளில் மேலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள முடியுமாவென்று அவதானிப்பதற்காக பணிப்பாளர் நாயகம் மற்றும் கலாநிதி சிரான் தெரனியகல குறித்த பகுதிக்கு இன்று செல்லவுள்ளனர்;. இந்த எலும்புக்கூட்டின் சிறிய பகுதி கற்பாறைக்குள் சிக்கியுள்ளதாகவும் அதனை நாங்கள் தோண்டியெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். (ஹபில் பரிஸ்)
No comments:
Post a Comment