இலங்கை அரசாங்கம் தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஒன்றைச்
செய்யவுள்ளது. என்றும் இந்த மாற்றம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் அனைவரும் அவசரமாக கொழும்புக்கு
அழைக்கப்பட்டுள்ளார்கள். என்றும் த ஆசியன் ட்ரிபியுன் இணையத்தளம்
தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் எதிர்காலத்தில்
அமெரிக்காவுக்குச் சார்பான வெளிவிவகாரக் கொள்கையை இலங்கை அரசு
கடைப்பிடிக்கும் எனவும் இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வெளிநாடுகளிலுள்ள
இலங்கைத் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான விஷேட செயலமர்வு ஒன்று
எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் தியத்தலாவையில்
நடைபெறவிருக்கின்றது.
இதற்காக தூதுவர்கள் ஜூலை 6 ஆம் திகதி
கொழும்பில் கூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். கொழும்பிலிருந்து விஷேட
வாகனங்களில் அவர்கள் தியத்தலாவைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஜூலை 7, 8 ஆம் திகதிகளில் இவர்களுக்கான
விஷேட செயலமர்வு தியத்தலாவையில் நடைபெறும். பின்னர் அவர்கள், அங்கிருந்து
கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கிளிநொச்சியில் மற்றொருநாள்
செயலமர்வு இடம்பெறும். ஜூலை 10 ஆம் திகதி இவர்கள் கொழும்பு
திரும்புவார்கள்.என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment