பாதாள உலகக் குழுக்களை கைது செய்த பொலிஸ் உயரதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் குழுத் தலைவர்கள் போன்றோரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரிகள் இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்த பொலிஸ் உயரதிகாரிகள், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதனால், சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை தொடர்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் தப்பிச் சென்றுள்ளதனால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சில பொலிஸ் அதிகாரிகள் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் ஒருவர் மற்றும் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சொந்தமான வாகனங்களில் பேதைப் பொருள் கடத்தப்பட்டிருந்தாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த நீதவானும், பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment