Tuesday, June 19

இலங்கையில் அரசியல் செய்ய கூலிப்படைகள் தேவை: ஐக்கிய தேசியக் கட்சி

 
இலங்கையில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலையில், அரசியல் நடத்துவது என்றால் கூலிப்படைகளின் துணை வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசி கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுசிறு அரசியல் அடாவடித்தனங்களை மேற்கொண்டு வந்த கூலிப்படைகள் தற்போது சில அரசியல்வாதிகளின் துணையுடன் சக்தி மயப்பட்டுள்ளன.
அண்மையில் கட்டுவன பகுதியில் ஜே.வி.பியின் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர், காவற்துறை தரப்பும் அரசாங்கமும் நடந்துக் கொண்ட விதம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் தற்போது அனைத்து பொருட்களும் விலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment