Saturday, June 16

முஸ்லிம், சிங்கள மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை குறைக்க அமைச்சர் குழு?

 
rishadமுஸ்லிம்கள், சிங்கள மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுவரும் முறுகல் நிலையை தடுத்து நிறுத்த அமைச்சர்கள் குழுவொன்றினை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது அமைச்சர் றிசாத் பதியுதீன் வைத்துள்ள கோரிக்கையை அடுத்தே ஜனாதிபதி இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத சக்திகளின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளமை குறித்து, அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் கோரியுள்ளார்.

தம்புள்ள, குருநாகல், தெஹிவளை தற்போது பெந்தர பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் மற்றும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தாக்கப்படுகின்றன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கையினை எடுக்காது பேனால், முஸ்லிம்-சிங்கள மக்கள் மத்தியில் பெரும் முறுகல் நிலையேற்படும் எனவும் அவர் சுற்றிக் காட்டியுள்ளார்.

ஆகவே, இவற்றினை உடனடியாக தடுத்து நிறுத்த அமைச்சர்கள் குழுவொன்றினை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தம்புள்ள பள்ளிவாசல் முதல் தற்போது வரை பள்ளிவாசல்கள் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் குறித்தும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் காணப்படும் காணி தொடர்பான சர்ச்சைகளின் போதும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவில்லாத நிலையொன்றை காணமுடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment