போருக்குப்பிந்திய இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த தீவிர செயற்பாட்டாளர்களினால் முஸ்லிம்களது சமய,பொருளாதார ஸ்தலங்களின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல், அச்சுறுத்தல் என்பனவற்றை யாவரும் அறிவோம். மட்டுமல்லாமல் ஒருசிலரின் இச்செயற்பாடு இலங்கை மக்களின் சகவாழ்வுக்கும், பரஸ்பர புரிந்துணர்வுக்கும் சவாலாக மாறிவருகிறது.
இத்தகைய செயற்பாடுகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என சிங்கள மக்களும் புத்தி ஜீவிகளும் கருத்தத்தெரிவித்து வருவதானது ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. எனினும் தீவிர செயற்பாட்டாளர்களது செயற்பாடானது சட்டத்தைக்கருத்திற் கொள்ளாது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது, மக்கள் மத்தியில் அவநம்பிக்கையையும்,
அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
அண்மையில் மூதூரில் இடம்பெற்ற சில பௌத்த தீவிர செயற்பாட்டாளர்களின் செயற்பாட்டால் மூதூரில் வாழும் மூவின மக்களும் பதட்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
மூதூரின் மையப்பகுதியில் ஜபல்நகர் மூணாங்கட்டை மலை எனப்படுகின்ற மலையின் மீது புத்தர் சிலை ஒன்றை நிறுவும் வேலையை சேருவிலை விகாராதிபதி சங்கைக்குரிய. சரணகீர்த்தி தேரோ அவர்கள் ஆரம்பித்துள்ளார்.
இம்மலையானது, மூதார்பபிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. அதில் சேருவிலையைச் சேர்ந்த தேரோ அவர்கள் பிரதேச சபையையின் அனுமதியையோ சர்வமதக்குழுவின் கருத்துக்களையோ பொருட்படுத்தாமல் எல்லோருக்கும் பொதுவாக பண்ணெடுங்காலமாக பயன்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு இயற்கை வளத்தின் மீது சமய அதிக்கத்தை ஏற்படுத்த முற்படுகின்றார். இச்செயலானது, பௌத்தசமயத்தை சட்டத்தை மதிக்காத ஏனைய மக்களது அபிலாசைகளை கருத்திற்கொள்ளாத ஒருசமயம் என எம்மை நம்பிவாழும் சிறுபான்மைமக்களுக்கு அறிமுகப்படுத்துவதாகி விடும். என மூதூர் வாழ் சிங்கள மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
ஜபல்நகர் மலையானது, மூதூருக்கு அழகு சேர்க்கும் ஒரு தனித்துவமான இயற்கையழகாகும். அதனை எண்ணி இங்கு வாழும் மூவின மக்களும் பெருமை கொண்டுள்ளனர்.
இம்மலையைச் சூழவுள்ள வயற்காணிகள் குடியிரப்புக்காணிகள் அனைத்தும் சிறுபான்மைமக்களான முஸ்லிம், தமிழ்மக்களது காணிகளாகும். இதுவே இம்மக்களது பிரதான ஜிவனோபாயமுமாகும்.மேலும், சுமாரர்500 குடும்பங்கள் கல்லுடைத்தலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர்.பண்ணெடுங்காலமாக மூதார் பிரதேசத்தின் கருங்கல் தேவையை இம்லையே வழங்கிவருகிறது.
இவ்வாறிருக்கையில் சேருவிலை தேரோ அவர்கள் மூதூர் பிதேசத்துக்கு வந்து எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளத்தை பௌத்த சமய ஆளுகைக்குட்படுத்துவதானது, மக்களது இயல்பு வாழ்வை சீர்குலைப்பதாக இருக்கிறது.
மலையுச்சியில் சிலை வைப்பது தொடர்பாக மூதூர்வாழ் சிங்கள மக்களிடமோ, பிரதேச சபையிடமோ ,சர்வமதக்கழவிடமோ கலந்து பேசாமை குறித்து கடந்த 12.06.2012 அன்று மலையில் சிலை வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சேருவில தேரோவிடம் சர்வமதக்குழவினரும் தவிசாளரும் உரையாடச் சென்ற போது, அவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடல்லாமல் 'உங்கள் அனைவரையும் ஊரைவிட்டே துரத்திவிடுவேன்' என அச்சுறுத்தியுள்ளார்.
மூதூரில் வாழும் மூவினமும் சுமுகமாக வாழும் இக்காலத்தில் இங்குள்ளமக்கள் பயன் பெற்றுவரும் இயற்கைவளமொன்றின் மீது சமய அடையாத்தினை நிறுவவேண்டியதன் தேவையெதுவும் இங்கில்லை. ஏற்கனவே இங்கு வாழம் சகோதர சிங்களமக்களுக்கு மிகப்பெரியதொரு விகாரை இருந்த வருகிறது.
எனவே மலையுச்சியில் சிலை நிறுவப்படும் பட்சத்தில் அது மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை ஆரம்பித்து வைப்பதாகிவிடும். உடனில்லாவிட்டாலும் நாளடைவில் கல்லுடைப்பு தடை செய்யப்படலம் அப்போது 500குடும்பங்கள் தம் கல்லுடைக்கும் ஜீவனோபாயத்தை இழக்கநேரிடும். மட்டுமல்லாது இங்குள்ள மூவின மக்களுமே எதிர்காலத்தில் பௌதிக அபிவிருத்திக்கு இன்றியமையாத கருங்கல்லை 87 மைல்களுக்கப்பால் உள்ள கந்தளாயில் இருந்து பன்மடங்கு பணம் செலவிட்டு மலையடிவாரமூடாக இறக்குமதி செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
அத்தோடு, நீண்டகாலத்தில் டம்புள்ளை போன்று புனிதப்பிரதேசம் பிரகடணப்படுத்தும் போது, மலையைச்சழவுள்ள விளை நிலத்துக்குள்ளும குடியிருப்புக்காணிக்குள்ளும் கால் வைக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு இங்குவாழும் சிறுபான்மை மக்களது, பொருளாதாரத்தை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி மக்களை விரக்தி நிலைக்கு உள்ளாக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, மூதூரில் வாழும் மூவின மக்கள் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ள பதட்ட நிலையை உடன் போக்கி எதிர்கால சந்ததியினரின் சகவாழ்வையும் ஜீவனோபாயத்தையும் பாதுகாத்து ஜனாதியதியின் 'போருக்குப்பிந்திய இலங்கையில் சகலருக்கும் வளமான சகவாழ்வு' என்ற கனவை நனவாக்க சர்ச்சைக்கரிய சிலைவைப்பினை தடுத்துநிறுத்தமாறு மரியாதைக்குரிய தேரோக்களையும், புத்திஜீவிகளையும் மக்களின் சுமுகமான வாழ்வின் பேரால் கேட்டுக் கொள்கின்றோம்.
-பள்ளிவாசல்கள் சம்மேளனம் - மூதூர்
No comments:
Post a Comment