
கண்டியில் நடைபெற்றுள்ள உலமா சபையின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கடந்த 88 வருடங்களாக அகில உலமா சபை பாரிய சமய, சமூகு பணிகளை முன்னெடுத்து வருகிறது. உலமா சபை ஏனைய சமூகங்களுக்கும் முன்மாதிரியாக வாழ வழிகாட்டிய ஒரு அமைப்பாகும்.
நாட்டில் இன்று பல சதிமுயற்சிகள் நடைபெறுகின்றன.
எமது அகீதாவைநாம் பாதுகாக்கவேண்டும். அவதானமாக நமது பணியை முன்னெடுக்க வேண்டும். உலமாக்கள் சமூகுத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபையானது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிமைப்பட்டதல்ல.
இது அனைவருக்கும் வழிகாட்டும் அமைப்பாகும் எனவும் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment