2001ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த ரணில்
விக்ரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தியிருக்காவிட்டால்,
சமாதானத்தை எட்டியிருக்க முடியும்.
நாட்டில் தேர்தல் அதிகாரத்தின் மூலம் ஆட்சி பீடமேறிய அரசாங்கத்தை நீங்கள் காலில் இழுத்தீர்கள். ரணிலின் சமாதான முயற்சிகளுக்கு தடையேற்படுத்தி இருக்கா விட்டால் முன்னரே நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்கும் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடைபெற்ற சம்பாசனை ஒன்றின் போது ராஜித இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொண்ட போது இருவருக்கு இடையில் இந்த சம்பாசனை நடைபெற்றுள்ளது.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமது கட்சி ஆதரவாளர்களை பழிவாங்கியதாக சந்திரிக்கா குற்றம் சுமத்தினார்.
சுமார் 1400 கட்சி ஆதரவாளர்கள், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டனர். மேலும் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன என சந்திரிக்கா ராஜிதவிடம் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கலைப்பதற்கு எடுத்தத் தீர்மானம் சரியானதே என அவர் குறிப்பிட்டார். இந்த திருமண விருந்துபசாரத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment