Thursday, June 28

இலங்கை முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை அரசாங்கம் மறைத்துவிட்டதா..?

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு பற்றிய இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.


இருந்தபோதும் இலங்கையில் வாழும் பல்லின சமூகங்களின் எண்ணிக்கையோ அல்லது மத ரீதியிலான விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது மதம், இனம் மொழி பற்றிய விபரங்களுமே சேகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இலங்கையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் இலங்கையின் சனத்தொகையில் இரண்டாமிடத்தை அடைந்திருப்பதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறனதொரு நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களின் உள்ளிட்ட எந்தவொரு சமூக, சமய பிரிவினரினதும் எண்ணிக்கையை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment