Sunday, June 17

ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் ஐ.தே.கவில் இணையத் திட்டம்



ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களை தேர்தலில் களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஆளும் கட்சியின் நடவடிக்கைகளினால் விரக்தியடைந்துள்ள சில சிரேஸ்ட அமைச்சர்களை முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சில சிரேஸ்ட அமைச்சர்கள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியாக தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment