Sunday, June 17

விடுதலைக்குப் பின் சரத் பொன்சேகாவின் முதலாவது அரசியல் கூட்டம்



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் முதலாவது அரசியல் கூட்டம் மத்துகமவில் நடத்தப்பட உள்ளது.
பொது மன்னிப்பு அடிப்படையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா முதல் தடவையாக பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொள்ள உள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவினால் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி பாராட்டும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment