பல ஆண்டு காலமாக விசாரனைகளின்றி தடுப்பு காவலில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும்,ஏனைய கைதிகளின் நீதிமன்ற விசாரணகளை துரிதப்படுத்துமாறும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ் நிலையில் நீண்ட காலமாக விசாரணைகளின்றி தமிழ் அரசியல் கைதிகளை மறியலில் தடுத்து வைத்திருக்கின்றமை,இயற்கை நீதிக்கு புறம்பானதொன்றாக எமது கட்சி கருதுவதாலும்.மேலும்அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களுக்கும் வாழ வேண்டும் என்ற ஆசைகளும்,அபிலாஷைகளும் இருப்பதனாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி மனிதாபிமான முறையில் விடுதலை செய்வது குறித்து தங்களது கவனத்தை செலுத்துமாறு எமது கட்சி கோறிக்கையினை முன் வைக்கின்றது.
நீதிமன்ற விசாரைணைகளை எதிர் நோக்கி நிற்கும் கைதிகளின் விசாரணைகளை துரிதமாக முடிப்பதன் மூலம்.பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மனத்தாங்கள்களையும்,துன்பங்களையும்,ஒரு முடிவுக்கு கொண்டவர முடியும் என எமது கட்சி நம்புகின்றது.இது இந்த நாட்டில் எல்லா மக்களும் சமமாக மதிக்கப்படுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவனவாக அமையும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் கடை பிடித்து வரும் கொள்கையின் விளைவாக புலிகள் இயக்கத்திலிருந்த பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சியளித்து,அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்.இந்த நாட்டில் சுதந்திரமாக ஏனைய பிரஜைகள் போல் வாழ்வதற்கும் வழியினை தாங்கள் எற்படுத்தியுள்ளீர்கள்.அதே போன்று கருணை உள்ளம் கொண்டு ஏனைய தமிழ்; கைதிகளையும் விடுதலை செய்வதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றது.
இவ்வாறு தடுப்புக் காவலில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்களும்,உறவினர்களும் அடிக்கடி என்னோடு தொடர்பு கொண்டு அவர்களின் விடுதலையினை பெற்றுத்தருமாறு மன்றாட்டமாக கேட்டுவருவதையும் தங்களது மேலான கவனத்திறகு கொண்டுவரவிரும்புகின்றேன் என்றும் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.;
No comments:
Post a Comment