Friday, June 22

10 வயது சிறு பிக்கு மீது 68 வயது மூத்த பிக்கு பாலியல் வல்லுறவு!



நாகொட - யட்டலமன்ன சுரம்யாராம விகாரையில் உள்ள 10 வயது சிறுவர் பிக்கு கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2012-06-01ம் திகதியன்று இரவு வேளையில் இடம்பெற்ற இந்த அபச்சாரம் குறித்து 2012-06-21ம் திகதி நேற்று (21) நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 வயது சிறுவர் பிக்கு சுரம்யாராம விகாரையில் உள்ள 68 வயது மூத்த பிக்குவால் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டு நாகொட பொலிஸாரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரஸ்நாயக்கபுர - நாகன்சோலே பகுயில் 14 வயது சிறுமி 29 வயது இளைஞரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்துள்ள ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொத்துவில் - சர்வோதயபுரம் - சின்னவுல்ல பகுதியில் காதல் தொடர்பினால் 15 வயது சிறுமி 19 வயது இளைஞரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment