Friday, June 22

மஹிந்தவின் மகனின் சனலும் மஹாராஜா நிறுவனத்தின் ஆதங்கமும் !

 
இலங்கை கிரிக்கெட் அணி உள்நாட்டில் பங்குபற்றும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒளிபரப்பு அனுமதியை மஹிந்த ராஜபக்ஷ மகனின் தொலைக்காட்சி நிறுவனமான கார்ல்டன் நெட்வேர்க் நிறுவனத்திற்கு வழங்கியமை நியாயமற்ற விடயம் என தெரிவித்து அதனை உடனடியாக இரத்து செய்து மீண்டும் விலை மனு கோருமாறு எம்ரிவி நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு அனுமதி சிஎஸ்என் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி எம்ரிவி நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவருக்கு கடிதம் அனுப்பிய நிலையில, அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜித் ஜயசேகர ஜுன் 7 ஆம் திகதி அனுப்பியுள்ள பதிலில் ஒளிபரப்பு உரிமம் கோர விண்ணப்பிக்குமாறு பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.


முழுப் பக்கத்தில் தேசிய பத்திரிகைகள் மூன்றில் விளம்பரம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்த போதும் பத்திரிகை விளம்பரங்கள் மிகவும் சிறியளவாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்ரிவி நிறுவனம், நாட்டு மக்களை ஏமாற்றும் வண்ணம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதனை மாத்திரம் காரணமாகக் கொண்டு கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை சிஎஸ்என் நிறுவனத்திற்கு வழங்கியதை இரத்துச் செய்து கிரிக்கெட் நிறுவனம் உயர் இலாபம் பெறும் வகையில் விலை கோரலை நடத்துமாறு எம்ரிவி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அண்மையில் பிபிசிக்கு இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் நட்டம் ஏற்பட்டாலும் ஜனாதிபதி மகனுடைய நிறுவனம் என்பதால் வழங்கப்பட்டதாக சொல்லாமல் சொல்லியிருந்தார்.

No comments:

Post a Comment