முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தினால் ஹஜ் யாத்திரிகர்களிடம் முற்பணம் பெறுவது முறையற்ற செயற்பாடாகும் என ஹஜ் குழுவின் இணை தலைவரும் சுற்றாடல் துறை பதில் அமைச்சருமான அப்துல் காதர் தெரிவித்தார்.
யாத்திரிகர்களிடம் பணம் வசூலிப்பதற்கு முஸ்லிம் சமய விவகார திணைக்களம் ஒரு வர்த்தக நிறுவனம் அல்ல. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பண வசூலிப்பிற்கு ஹஜ் ஏற்பாட்டு குழு பொறுப்பு கூற முடியாது. ஆனால், யாத்திரிகள் பிரச்சினை ஏற்பாடாதிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவதாக பதில் அமைச்சர் காதர் கூறினார்.
ஹஜ் கடமையை கன்காணிப்பதற்கான இலங்கை ஹஜ் குழுவின் இணை தலைவராக தன்னை தவிர வேறு யாரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கவில்லை என ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக புனித மக்கா நகர் சென்று நாடு திரும்பிய நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் தி.மு.ஜயரட்னவின் கடிதத்தை சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சின் செயலாளர் பைஸால் பின் அப்துல் அஸீஸ் அல் பிஜானிடம் ஜித்தா நகரில் வைத்து கையளித்த போது, 2012ஆம் ஆண்டு 6,000 ஹஜ் கோட்டவை வழங்குமாறு தான் கோரிக்கை விடுத்ததாக பதில் அமைச்சர் காதர் குறிப்பிட்டார்.
புனித ஹஜ் காலத்தில் இலங்கை யாத்திரிகர்கள் புனித மக்கா நகர் செல்வாதாற்கா குறைந்தது 10 விசேட விமான சேவையினை ஏற்படுத்தூறு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment