Wednesday, June 20

பஷில் ராஜபக்ஸவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் சதி: திஸ்ஸ அத்தநாயக்க

 
 
அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் சதி இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பலமான எதிர்க்கட்சி இல்லையென அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கூறியமை தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
உயரத்திலிருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறிய பலர் பள்ளத்தில் வீழ்ந்ததை வரலாற்றில் நாம் கண்டுள்ளோம் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment