Tuesday, June 19

ஆசிய - ஆபிரிக்க சட்ட மாநாட்டில் அமைச்சர் ஹக்கீம்



நைஜீரியாவின் அபூஜா நகரில் தற்பொழுது நடைபெறும் ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தின் 51ஆவது மாநாட்டில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொணடுள்ளார்.

ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இந்த மாநாட்டில் ஆரம்ப உரையை அமைச்சர் ஹக்கீம் ஆற்றினார்.

ஆசிய, ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த மேற்படி அமைப்பின் அங்கத்துவ நாடுகள் எதிர்நோக்கும் சட்ட ரீதியான பல்வேறு பிரச்சினைகளை இதன்போது விபரித்து  கூறினார்.

அத்துடன் வியட்நாம் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளையும் இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்தார்.

47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைமையகம் இந்தியாவின் புது டில்லி நகரில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜுன் 24ஆம் அமைச்சர் ஹக்கீம் நாடு திரும்பவுள்ளார்.

No comments:

Post a Comment