Wednesday, June 20

சவூதி அரேபியாவில் 4 பேருக்கு தலையை வெட்டி மரண தண்டனை



சவூதி அதிகாரிகளால் எகிப்தியர் இருவருக்கும் சவூதி அரேபியர்கள் இருவருக்கும் செவ்வாய்க்கிழமை தலை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எகிப்தியர்களான மொஹமட் பின் நேப்பு, ஜமலத் பின் நேப்பும் 9 வயது சிறுமியொருவரை மதீனாவிலுள்ள புனித பள்ளிவாசலிலிருந்து கடத்திச் சென்று மூன்றரை வருடங்களாக தமது இருப்பிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.


இதன்போது மொஹமட் சிறுமியை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்அதன் பின் அவர்கள் அச்சிறுமியை நாட்டை விட்டுக் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்அத்துடன் அவர்களது வன்முறை நடவடிக்கை காரணமாக மொஹமட்டின் மகன்மார் இருவர் மரணமானதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் மதினாவில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தனது சகாவைச் சுட்டுக் கொன்ற அலி பின் மொஹமட் அல் கஹ்தானி என்பவருக்கு அந்நாட்டின் அஸிர் பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், இரு பெண்களுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவை வைத்திருந்தமை, சூனிய வேலைகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் முறாபின் அலி அல்அஸிரி என்ற சவூதி பிரஜைக்கு நஜ்ரான் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் சவூதி அரேபியாவில் இந்த வருடம் தலை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளானவர்கள் தொகை 39ஆக உயர்ந்துள்ளதுகடந்த வருடம் அந்நாட்டில் 76 பேருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment