அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அந்தவகையில் உருளைக் கிழங்கு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான உணவுப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி கடந்த 12ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் சீனியின் இறக்குமதி வரி 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் செமன் டின் மீனின் இறக்குமதி வரி 85 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் நெத்தலியின் இறக்குமதி வரி 30 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 30 ரூபாவினாலும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 35 ரூபாவினாலும், ஒரு கிலோ சிறிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 25 ரூபாவினாலும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் இறக்குமதி வரி 40 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மாசியின் இறக்குமதி வரி 250 ரூபாவினாலும், ஒரு கிலோ கருவாட்டின் இறக்குமதி வரி 100 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment