சுமார் 90 கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு தெரியாதவாறு நிதி கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.
நிறுவனத் தலைவர்கள் பொது திறைசேரிக்கு நிதி வழங்காமையினால், திறைசேரி குறித்த நிறுவனத் தலைவர்களிடம் அடிக்கடி அறிவித்த போதிலும் அவர்கள் போலி காரணங்களைக் கூறி நிதி வழங்கு வதை தாமதப்படுத்தி வருவதாக பொது திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் நிதியினை நிலையான வைப்புக்கள், திறைசேரி உண்டியல்கள் என்பவற்றிலும் இரகசியமான முறையில் முதலீடு செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இவ்வாறான நிறுவனங்களின் தலைவர்கள் பல வருட காலமாக பல்வேறு விதமான மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான தொகையினை வீண்விரயம் செய்து வந்துள்ளதாகவும் கணக்காய்வுத் துறை தெரிவிக்கின்றது.
பொது திறைசேரியில் நிதி இல்லாத சந்தர்ப்பங்களில் அரசாங்கம் பல்வேறு வழிகளில் கடன் பெற்று வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் அதிகமான தொகையினை யாருடைய அனுமதியின் மீது நிலையான வைப்புக்களில் வைப்புச் செய்துள்ளன என்பது தொடர்பாகவும் அரச கணக்காய்வுத் துறை கேள்வி எழுப்புகின்றது.
பொது திறைசேரிக்கு நிதியினை வழங்காமை மற்றும் திருட்டுத்தனமான முறையில் நிலையான வைப்பிலிட்டு நிதி சம்பாதித்தல் என்பன தொடர்பாக அரச கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் அந்த நிறுவனங்களுக்கு கணக்காய்வு விசாரணைகளை அனுப்பியுள்ள போதிலும் அவற்றிற்கு பதிலளிக்காது நழுவி வருவதாகவும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment