Sunday, June 17

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை கைவிடப்பட்டது


[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 01:18.10 AM GMT ]
கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சிக்கனமான பயணத்தை முன்னெடுக்க முடியாது என்ற அடிப்படையில் இந்த கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் காணப்படும் வசதிகளற்ற நிலையால், பயணிகளை சோதனையிடும் நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த பயணிகள் கப்பல் சேவை நட்டத்தை எதிர்நோக்குவதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நட்டம் என்பதை காரணம் காட்டி கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment