இஸ்லாமாபாத்:ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி அறிவித்துள்ளார். ஏதேனும் சர்வதேச நிர்பந்தங்களுக்கு அடி பணிந்து ஈரானுடனான உறவு சீர்குலைய அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறினார். ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார் சர்தாரி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேலின் முயற்சிகள் புதிய தளத்தை அடைந்த சூழலில் சர்தாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது. பல்வேறு நாடுகளில் இஸ்ரேலிய தூதர்களை குறிவைத்து நடந்த தாக்குதலுக்கு காரணம் ஈரான் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. முன்பு ஈராக்கை தாக்குவதற்கு முன்னோடியாக நடந்தது போன்ற மனரீதியான போர் என்று பொதுவாக கருதப்படுகிறது.
ஈரானுடன் சேர்ந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள எரிவாயு பைப்லைன் திட்டத்தை நிறைவுச்செய்வோம் என்று சர்தாரி கூறியுள்ளார். தினமும் 21.5 லட்சம் க்யூபிக் மீட்டர் எரிவாயுவை ஈரானில் இருந்து பைப்லைன் வழியாக இறக்குமதிச் செய்ய பாகிஸ்தான் முடிவுச்செய்துள்ளது.
பாகிஸ்தானின் எரிபொருள் தட்டுப்பாட்டை சீர் செய்ய பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள இத்திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடி பணிந்து இந்தியா இத்திட்டத்தை முடக்கி உள்ளது.
thanks to asiananban.blogspot.com
No comments:
Post a Comment